Contact Form

Name

Email *

Message *

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்: விஞ்ஞானிகள் தெரிவிப்பு

பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி, அதன…

Image
பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடந்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணித்தியாலங்களை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.
எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த கால ஆய்வுகளின் அடிப்படையில், இங்கிலாந்து ஆய்வாளர்களால் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் மெதுவான நிகழ்வாக இருக்கும் என தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You may like these posts

Comments