தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் தேசிய பாடசாலையின் 2016 இவ்வாண்டில் (O/L) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ, மாணவிகளுக்காக பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கானது 05.11.2016 சனி இன்று காலை 8.30மணியளவில் தேசிய பாடசாலையின் ஒன்றுகூடம் மண்டபத்தில் இடம்பெற்றது.இன்நிகழ்வின் போது அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர். திரு .குணாளன் அவர்களும் மற்றும் தேசிய பாடசாலையின் அதிபர் திரு.S.இரவீந்திரன் அவர்களும், பாடசாலையின் பிரதி அதிபர் திரு.தயாரூபன், பாடசாலையின் உப அதிபர் திரு.தர்மசீலன் மற்றும் பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான கே.சுதாகரன்,, எஸ்.பார்த்தீபன், என்.எ.லோஜன், ஆர்.சயனொளிபவன், ரி.டினுராஜ், தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இன்று முதலாம் நாள் கருத்தரங்காக வரலாறு பாடம் இடம் பெற்றது, இதற்காக வளவாளர்களாக திருமதி.T.சிவகுமார், திரு.சதீஸ்குமார், கிருஸ்னசாமி ஆசிரியர்களினார் விரிவுரைகள் இடம்பெற்றது.
இக் கருத்தரங்கிற்கு அனுசரணையாளர்களாக ஆர்.என் சீடி கோம் (RN CD Home) தம்பிலுவில், செல்வம் கென்செட்சன்( Selvam Construction) தம்பிலுவில் ,றோஜித் நகைத்தொழிலகம்(Rojith Gold House) தம்பிலுவில், சனோ அக்றோ கெமிகல்ஸ்(Sano Agro Chemical) தம்பிலுவில் ஆகியோர் அனுசரனை வழங்கியுள்ளனர். இவ் அனுசரனையாளர்களுக்கு தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் மனமார்ந்த பாரட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.








































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!