அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான்.
வெற்றிகரமாக பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் குழந்தை 26.5 வாரங்கள் கருவில் இருந்து பின்னர் பிரசவமானது.
தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை உள்ளது.
தாயின் உடல்நிலை மிக மோசமாக இருந்த காரணத்தால், அவருக்கு பிரசவ வலி வந்த போது அதிக இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளதுடன், தாயும் குழந்தையும் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!