சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் இரண்டாவது பகுதியினை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!