Contact Form

Name

Email *

Message *

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான திருத்தங்களை மேற்கொள்ள காலஅவகாசம்!

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு அனுமதிப்பதத்திரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்…

Image
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு அனுமதிப்பதத்திரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதிக்குள் இந்த அனுமதிப்பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாம் அனுப்பிய விண்ணப்பத்தின் பிரதியையும் பரீட்சைக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணத்தின் பிரதியையும் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைக் கிளைக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பில் தெளிவுபடுத்திய விடங்களை  அனுப்பி வைக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் சில அதிபர்களால் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குவதன் மூலம் விண்ணப்பதாரிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அதனால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாததன் காரணமாக விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான பொறுப்பை அதிபர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம்-  1911
பாடசாலை பரீட்சைகள் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்-  0112-78-42-08 அல்லது 0112-78-45-37 

You may like these posts

Comments