Contact Form

Name

Email *

Message *

உகந்தைமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த ஸ்கந்தசஸ்டி விரதமும் சூரசம்ஹாரமும்!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தைமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த ஸ்கந்தசஸ்டி விரதம் 31ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. விரதம் ஆறுதினங்கள் அனுஸ்ட்டிக்கப்பட்டு நவெம்ப…

Image
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தைமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த ஸ்கந்தசஸ்டி விரதம் 31ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. விரதம் ஆறுதினங்கள் அனுஸ்ட்டிக்கப்பட்டு நவெம்பர் 05ஆம் திகதி சனிக்கிழமைமாலை சூரசம்ஹாரத்துடன் நிறைவடையவுள்ளது.
சகல விரத அனுஸ்ட்டானங்களும் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள்தலைமையில் நடைபெறவுள்ளன.அங்கு தினமும் கந்தபுராண படனமும் புராணம் விதந்துரைக்கும் சில முக்கிய காட்சிகளும் பாவனோற்சவமாக ஆலயவீதியிலும் வங்கக்கடலோரத்திலும் நடைபெறும்.
06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தமும் பாரணமும் இடம்பெற்று மாலையில்திருக்கல்யாணம் பொன்னூஞ்சலுடன் இடம்பெறும். ஆலய வண்ணக்கர் சுதுநிலமேதிசாநாயக்க தலைமையில் முதல்நான் விரதபூஜை ஆரம்பமாகவுள்ளது. விரத காலத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பரிபாலனசபைச்செயலாளர் பஞ்சாட்சரம் மேலும் தெரிவித்தார்.


You may like these posts

Comments