Contact Form

Name

Email *

Message *

யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்

அம்பாறை, திருக்கோவில் தாண்டியடி வயல் பிரதேசத்தில் வயலுக்கு சென்ற விவசாயி ஒருவரை 16.11.2016 புதன்கிழமை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க…

Image
அம்பாறை, திருக்கோவில் தாண்டியடி வயல் பிரதேசத்தில் வயலுக்கு சென்ற விவசாயி ஒருவரை 16.11.2016 புதன்கிழமை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.


 திருக்கோவில் 2ஆம் பிரிவு நாவலடி வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயி  சம்பவதினமான காலை தாண்டியடி கல்குவாரிக்கு அருகாமையிலுள்ள வயலுக்கு வேளாண்மைக்கு தெளிகருவி மூலம் மருந்து தெளிப்பதற்காக சென்ற நிலையில் சென்றபோது யானை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார் இதனையடுத்து இவரை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You may like these posts

Comments