இந்த நில அதிர்வைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த பல பிந்திய நிலநடுக்கங்களும் உணரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புக்குசிமாவுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரமான அலைகள் உருவாகலாம் என ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நில அதிர்வு 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் புக்குசிமா அணு உலை பாரிய சேதத்துக்குள்ளானது.
புக்குசிமா அணு உலையில் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயற்பாட்டை நிறுத்தியுள்ளதாக அமைச்சரவை சிரேஷ்ட பேச்சாளர் Yoshihide Suga தெரிவித்துள்ளார்.
எனினும் வெப்பநிலை அதிகரித்தமைக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லையென அவர் கூறியுள்ளார்.
நிலைமையை அவதானிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் சிறப்பு அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!