Contact Form

Name

Email *

Message *

பதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை

பதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

Image
பதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
தனியார் வைத்திய நிலையங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தனியார் வைத்திய சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.
தனியார் வைத்திய நிலையங்களை பதிவு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கட்டணம் அறவிடப்படும் எனவும் அவர் கூறினார்.
தனியார் வைத்திய நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டுக்கான பதிவை முன்னிட்டு ஒக்டோபர் மாதத்திலேயே சில தனியார் வைத்திய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பதிவு செய்யப்படாமல் முன்னெடுத்துச் செல்லப்படும் தனியார் வைத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் வைத்திய சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may like these posts

Comments