உலகப் புகழ்பெற்ற Oxford அகராதி, 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த சொல்லாக post-truth என்னும் சொல்லை தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த சொல்லை Oxford அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச சொல்லாக post-truth என்னும் சொல்லை தேர்ந்தெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச சிறந்த சொல்லை பொறுத்தவரையில் இந்த அகராதியின் பிரிட்டன், அமெரிக்க பதிப்புகள் சில நேரங்களில் வேறு சொற்களை தேர்ந்தெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு பதிப்புகளும் ஒரே சொல்லை தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்த சொல் பயன்பாடு உலக அளவில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த சொல்லை Oxford அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச சொல்லாக post-truth என்னும் சொல்லை தேர்ந்தெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
“பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது” என இந்த சொல்லுக்கு Oxford அகராதி விளக்கம் கொடுத்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!