Contact Form

Name

Email *

Message *

சூரிய மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உ…

Image
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன.
பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன.
அவற்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய கெப்ளர் தொலைநோக்கி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா அறிவித்துள்ளது.
அவற்றில் 9 கிரகங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்றன. அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015 ஆம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது.

You may like these posts

Comments