Contact Form

Name

Email *

Message *

வெளிவாரிப் பட்டப்படிப்பு பருவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புக்காக 2014/2015 கல்வியாண்டில் பதிவு செய்ய…

Image
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புக்காக 2014/2015 கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முன்னோடிக் கருத்தரங்கும் முதலாம் வருட முதலாம் பருவ பரீட்சையும் நடத்தப்படவுள்ளன.

 கலைமானி, வியாபார நிர்வாகம் மற்றும் வணிகமானி (பொது) ஆகிய வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறூக், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். 

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை இந்தக் கற்கை  நிலையத்தில் பெற முடியும். அல்லது, தபால் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பெற முடியும். விண்ணப்படிவங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் உதவிப் பதிவாளர், வெளிவாரிப் பட்டப்படிப்பு மற்றும் தொழிசார் கற்கைகளுக்கான நிலையம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்பங்கள் பதிவிறக்க (Application Download)-


You may like these posts

Comments