Contact Form

Name

Email *

Message *

சுற்றுலாப்பயணியின் செல்பி மோகத்தினால் நிகழ்ந்த மற்றுமொரு பரிதாப உயிரிழப்பு (PHOTOS)

பல்கேரியாவில் செல்பி மோகத்தில் இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்த அன்னப்பறவையை அதன் இறக்கையைப் பிடித்துத் தூக்கி, அது உயிரிழக்க காரணமாக அமைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள…

Image
பல்கேரியாவில் செல்பி மோகத்தில் இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்த அன்னப்பறவையை அதன் இறக்கையைப் பிடித்துத் தூக்கி, அது உயிரிழக்க காரணமாக அமைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளது ஓரிட் ஏரி அன்னப்பறவைகள் நிறைந்த ஒரு ஏரி
இந்த ஏரியை பார்வையிடுவதற்காக தினமும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அந்தவகையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர், அந்த ஏரிக்கரையில் அன்னப்பறவையுடன் செல்பி எடுக்க விரும்பியுள்ளார். இதற்காக ஏரியில் இருந்த அன்னப்பறவை ஒன்றை, அதன் இறக்கைகளைப் பிடித்து வெளியே தூக்கியுள்ளார்.
இதில், அந்த அன்னப்பறவை பலத்த காயமடைந்துள்ளது ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் செல்பி எடுத்துவிட்டு, அந்த அன்னப்பறவையை அப்படியே கரையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த அன்னப்பறவை பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பெண் அன்னப்பறவையை அதன் இறக்கைகளைப் பிடித்து தூக்கும் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் பரவி வருகின்றது. பறவைகள் நல ஆர்வலர்கள் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் செல்பி மோகத்தால் ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகிறது அதிலும் குறிப்பாக ஆபத்தான் இடங்களில், விலங்குகளுடன் படமெடுக்க முயற்சிக்கும் போது இத்தகைய விபத்துகள் நடக்கின்றன. கடந்தாண்டு விஷமுள்ள பாம்புடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை, அப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமன்றி அண்மையில் இது போன்று சுற்றுலாப்பயணிகளின் செல்பி மோகத்தினால் டொல்பின் குட்டி ஒன்று உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.



You may like these posts