Contact Form

Name

Email *

Message *

“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு பொது மக்களிடமிருந்து சுமார் 45,000 முறைப்பாடுகள்

“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு பொது மக்களிடமிருந்து இதுவரை சுமார் 45,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்று ஒருவருடப் பூர்த்தியை…

Image
“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” சேவைக்கு பொது மக்களிடமிருந்து இதுவரை சுமார் 45,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்று ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு, கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொதுமக்களின் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையை அதிகரிப்பதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் சேவையின் மூலம் பல கடிதங்களும், கோவைகளும் தொடர்பில் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்கப்படாது கிடப்பில் போடப்பட்டிருந்த யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் சேவையூடாக பதிவு செய்யப்பட்டுள்ள 44 ஆயிரத்து 677 மனக்குறைகள் மற்றும் கருத்துகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை 1919 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டவையாகும்.
இதுதவிர மின்னஞ்சல், முகநூல் மற்றும் தபால் மூலமும் இந்த சேவைக்கு மக்களின் குறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

You may like these posts