Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் பாடசாலைகளை "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் பிரேரணை

திருக்கோயில் வலயத்தில்உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில் மத்தியமகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலையாக தெரிவுசெய்…

Image
திருக்கோயில் வலயத்தில்உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில் மத்தியமகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலையாக தெரிவுசெய்யப்படவேண்டும் என 15.03.2016 அன்று கிழக்கு மாகாணசபையில் இடம் பெற்ற அவசரபிரேரணையின் கீழ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.கு.புஸ்பகுமார் அவரினால் அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் ஏன் திருக்கோயில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும்  இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதனை கிழக்கு மாகாண சபையின்  மாதாந்த அமர்வு நடைபெற்றவேளை இரண்டு பாடசாலைகளையும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என தனிப்பட்ட பிரேரணை முன்வைத்து அதன் மூலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் கோரிக்கை விடுத்தார்.

இப் பிரேரணை கிழக்கு மாகாணசபை தவிசாளரினால் முன்னேடுக்கப்பட்டு கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிற்பாடே கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை வழங்குமாறு சபைத் தவிசாளர் கட்டளையிட்டார். அதற்கிணங்க பேரவை கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் புதன்கிழமை (15.3.2016)  நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.கு.புஸ்பகுமார் அவர்கள் தொடர்ந்து பேசுகையில்...மேற்படி இரண்டு பாடசாலைகளும் "அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை" எனும் திட்டத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்' ஆகிய இரண்டு பாடசாலைகளும் ஏன் இதுவரைக்கும்  இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதனை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் அவர்களிடம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இப்பாடசாலை அபிவிருத்தி செய்துதரவேண்டும் என கடந்த 2016. 2.1திகதி எழுத்துமூலம் பிரதேசத்தில் உள்ள  புத்திஜீவிகள்,பாடசாலைஅபிவிருத்திசங்கத்தினர்,பெற்றோர்கள்,என்னிடம் தெரிவித்தனர்.அம்பாறை மாவட்டத்தில் மாகாண சபைஉறுப்பினர்களோ,அரசியல்வாதிகளோ கவனத்தில் கொள்ளவில்லை என மனவேதனையுடன் ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்தார்கள்.
இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இப்பாடசாலையின் பிரச்சனையை தங்களின் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.  இவ்விவாதத்தின் பின் மேலுள்ள இரு பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதற்காகவே இவ் அவசரப்பிரேரணை கிழக்குமாகாண சபையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பதிலளித்து கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் நிஷாம் அவர்கள் உரையாறுகையில்;  இத் திட்டத்தில் 708 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன, இத்திட்டத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் என்பவரின் பணிப்புரைக்கு இணங்க இவ் இரண்டு பாடசாலைகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன எனவே இத்திட்டத்தை மத்திய அரசாங்கத்தில் உள்வாங்கப்படும் என சபையில் தெரிவித்ததுடன், இதற்கான மேலதிக செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.





You may like these posts