ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முத லாம் திகதி வெள்ளிக்கிழமை ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினு லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு ள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வருகை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்றது.
இதில் பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயம் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.