பண்டிகை காலங்களில் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சுற்றி வளைப்பினை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த கால கட்டத்தில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.