Contact Form

Name

Email *

Message *

பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை

17, 695 பாடல்கள் பாடி பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் தந்தை …

Image
17, 695 பாடல்கள் பாடி பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் தந்தை ஒரு வக்கீல். 
பாடசாலையில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார், இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தினார் வைத்தார்.
1955ல் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..’, ‘உன்னைக் கண் தேடுதே…’ பாடல்களால் பிரபலமடைந்தார்.
1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சௌந்தர்ராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன.
குறிப்பாக, டி.எம். சௌந்தர்ராஜன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10 இற்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
பல்வேறு இசை நிறுவனங்களுக்காக 1000 இற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய சாதனைக்கு, கின்னஸ் அங்கீகாரம் அளித்துள்ளது 1960 முதல் இன்றுவரை பி. சுசிலா 17, 695 பாடல்களைப் பாடியுள்ளார்.

You may like these posts