தம்பிலுவில் ஸ்ரீ காயத்திரி தபோவனத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் நேற்று 07ம் திகதி இரவு பக்திபூர்வமாக பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
நிகழ்வுகளின் ஆரம்பத்தில் பாதரட்சைக்கான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் விசேட பூசைகளுடன் சப்தரிஷி தேர் பவனியானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு பிரதானவீதியூடாகச் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இந் நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.