மைக்ரோசொப்ட் எல்லையற்ற ஒன்ட்றைவ் சேமிப்பு வசதியை சில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி திரைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை 75 டி.பி அளவுக்கு சேமித்துவைத்துள்ளதால், கடந்த மதம் ஒன்ட்ரைவ் எல்லையற்ற சேமிப்பு வசதியை நிறுத்தியது மைக்ரோசொப்ட் நிறுவனம்.
அதேபோல் இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது 15ஜி.பி-யில் இருந்து 5ஜி.பி.-யாக குறைக்கப்பட்டது.
ஆனால் மைக்ரோசொப்ட்டின் இந்த முடிவு, அந்த நிறுவனத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
5 ஜி.பி.-யாக குறைக்கப்பட்ட இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது மீண்டும் 15 ஜி.பி-யாக அதிகரித்துள்ளது மைக்ரோசாப்ட். இந்த இலவச 15 ஜி.பி. வசதியை மீண்டும் பெற 2016 ஜனவரி 31 ஆம் திகதிக்குள், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கேட்டுள்ள மைக்ரோசொப்ட். ஒன்ட்ரைவ் எல்லையற்ற சேமிப்பு வசதியை நிறுத்திய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.