சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரி.இராசநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;, 'திருக்கோவில் கல்வி வலயத்தை பொறுத்தமட்டில் ஆசிரிய ஆலோசகர்; ஒருவர் ஓய்வுபெறும் போது வலயத்தில் உள்ள அத்துறைசார்ந்த ஆசிரியர்கள் குழாமினால் வாழ்;த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்கு காரணம் அவரது சிறந்த சேவையும் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்த தலைமைத்துவ பண்புகளுமே ஆகும். ஆகவே இவரது சிறந்த பணியை அனைத்து கல்விபுலன் சார்;ந்தவர்களும் பின்பற்ற முயற்சிக்கவேண்டும் என்பதுடன் இவரது ஓய்வு கல்வி வலயத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாறானதொரு சிறந்த நிகழ்வில் தான் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட அவர் இதனை முன்னின்று நடாத்திய ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுவதாகவும் கூறினார். நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரை பாராட்டி பாராட்டுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதிகல்விப் பணிப்பாளர்கள் வி.குணாளன், வை.ஜெயச்சந்திரன், கணக்காளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


