Contact Form

Name

Email *

Message *

முக்கிய நூல்கள் சிங்கள மொழியிலேயே உள்ளன

இலங்கையில் சட்டம், மருத்துவம் பொறியியல் துறைகள் உட்பட முக்கிய துறைகளுக்கான நூல்கள் சிங்கள மொழில் மாத்திரமே காணப்படுகின்றன.ஆனால் எமது தமிழ் மொழியில் இவ்வாறான நூல்கள் கிடைப்…

Image
இலங்கையில் சட்டம், மருத்துவம் பொறியியல் துறைகள் உட்பட முக்கிய துறைகளுக்கான நூல்கள் சிங்கள மொழில் மாத்திரமே காணப்படுகின்றன.ஆனால் எமது தமிழ் மொழியில் இவ்வாறான நூல்கள் கிடைப்பதென்பது அரிதாகவே உள்ளன என சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார். 

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நவீன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற மு.வரதராசாவின் நெஞ்சம் தொடாத உறவு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஏனைய சமூகங்கள் தங்களின் இருப்புக்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், எமது தமிழ் சமூகம் இன்றும் அச்சம் கொண்டு வாழ்வதுடன் ஒரு சிலர் இவ்வாறு உயிரை மதிக்காது சமூகத்திற்காக முன்னின்று உழைக்க முன்வருபவர்களையும் ஊக்கப்படுத்தவும் தயார் இல்லை. 

ஏனைய சமூகத்தினர் தங்களின் இனத்துக்காக பாடுபடுகின்ற இலைமறைகாயாக இருப்பவர்களை உற்சாகப்படுத்தி தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்கின்றனர்.ஆனால் தமிழ் சமூதாயம் இன்னும் மனமாற்றம் பெறவில்லை. இவ்வாறு பிற்போக்கான மன நிலையில் இருந்து விடுபட்டு தமிழ் சமூகம் முன்னோக்கி நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு இனி வருகின்ற சமூதாயமும் இருக்க கூடாது. நாம் நமக்காக மாத்திரம் வாழாது நமது இனத்தின் விடிவுக்காகவும் நிலைத்திருப்பதற்காகவும் பாடுபட வேண்டும் என்றார். 

You may like these posts