Contact Form

Name

Email *

Message *

விண்ணப்பம் கோரல்

அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளிடமிருந்து நிந்தவூரிலுள்ள மாவட்ட அலுவலகம் விண்ணப்பங…

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளிடமிருந்து நிந்தவூரிலுள்ள மாவட்ட அலுவலகம் விண்ணப்பங்கள் கோரியுள்ளன. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (மட்டம் 5 மற்றும் 4), மின்னியல், மரக் கைவினைஞர், குளிர்;சாதனப்பெட்டி மற்றும் காற்றுச்சீராக்கி திருத்துநர், நிர்மாணக் கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துநர்;, உருக்கி ஒட்டுநர், அலுமினியம் பொருத்துநர், அழகுக்கலை, சிகை அலங்கரிப்பாளர், சமையல் கலைஞர், அறை அலங்கரிப்பாளர், உணவு பரிமாறுநர், வாகனத் திருத்துநர், ஆடைத்தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குநர், தொலைக்காட்சி மற்றும் வானொலி உட்பட இலத்திரனியல் சாதனத் திருத்துநர், மோட்டார்; சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துநர், சாரதிப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, மத்திய முகாம், கல்முனை, காரைதீவு, பொத்துவில் (2 பயிற்சி நிலையங்கள்) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது, திருக்கோவில் ஆகிய பயிற்சி நிலையங்களில் இந்தப் பயிற்சிநெறிகள் நடத்தப்படவுள்ளன.

You may like these posts