அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பே களப்பு பாலத்தினடியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டவர் இலண்டன் பிரஜையான டிசாந்த் சுப்பிரமணியம் (வயது 24) என அடையாளம் காணப்பட்டு;ள்ளார் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்களன்று பொத்துவில் அறுகம்பையிலுள்ள 'லோங்க் பீச்' எனும் உல்லாச விடுதியின் இரண்டாம் இலக்க அறையில் இவர் தனியாகவே தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறுகம்பை களப்பு பாலத்தின் கீழிருந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது.
இவர் தங்கியிருந்த அறையிலிருந்து கைக் கடிகாரம் ஒன்றும் இலங்கைப் பணம் 41 ஆயிரம் (41000) ரூபாவும், 10 கிராம் அபின் போதைப் பொருளுட்பட, கொமர்சியல் வங்கி விசா கிரடிற் கார்ட்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இங்கிலாந்தில் திருமணமானவர் என்ற தகவலும் தெரியவந்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!