Contact Form

Name

Email *

Message *

நாளை திருக்கோவிலில் பொன்.சுகந்தனின் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் இலங்கையில் புகழ் பெற்ற பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரும் தமிழ்ப் பண்டிதரும் சைவப் புலவருமான பொன்.சுகந்தனின் சிறப்புச்சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு …

Image
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் இலங்கையில் புகழ் பெற்ற பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரும் தமிழ்ப் பண்டிதரும் சைவப் புலவருமான பொன்.சுகந்தனின் சிறப்புச்சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நாளை 08ம் திகதி சனிக்கிழமை மாலை 07.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


பொன்.சுகந்தன் அம்பாரை மாவட்டத்திற்கு  விஜயம்செய்வது இதுவே முதற்றடவையாகும்.

இவர் இலங்கையில் வரலாற்றுத் தொன்மையுடைய ஆலயங்களிலும் வெளிநாடுகளிலும் சிறப்புச் சொற் பொழிவினை ஆற்றியுள்ளதோடு வானொலி, தொலைக்காட்சிகளிலும் தொடர் சொற்பொழிவுகள், நற்சிந்தனைகள், பட்டிமன்றங்கள் முதலியவற்றை நிகழ்த்திய புகழ் பெற்ற சமயப்பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய நிருவாக சபையினரும் திருவிழா உபயகாரர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர் என்று ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

சைவஅன்பர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து சித்திரவேலாயுதனின் திருவிழாவினைக்காண்பதோடு பிரபல சொற்பொழிவாளர் பொன்.சுகந்தனின் ஆன்மீகச்சொற்பொழிவினை பருகுமாறு அன்போடு அழைக்கின்றோம் என அவர் மேலும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

You may like these posts