இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நாடுபூராகவும் 196பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் மூலமாக தெரிவு செய்யுவதற்கான தேர்தல் நடைபெற்று இன்று (18) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அதிகூடிய வாக்குகளை பெற்று ஐக்கிய தேசிய கட்சி 93ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 83ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 14ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 4ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1ஆசனத்தையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அத்துடன் 225பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை பராளுமன்றத்தில் இன்னும் 29பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.