Contact Form

Name

Email *

Message *

இன்று திருக்கோவிலில் கரைவாகுப்பற்று திருவிழா

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின்  வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் 09ஆம் நாள்  திருவிழா நாளை  05ஆம் திகதி நடைபெறும் என்று ஆலயதலைவர் சு…

Image
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின்  வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் 09ஆம் நாள்  திருவிழா நாளை  05ஆம் திகதி நடைபெறும் என்று ஆலயதலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள்  தலைமையில் கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


இம்மகோற்சவம் தொடர்ந்து 18தினங்கள் நடைபெற்று 14ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.நாளை 05ஆம் திகதி கரைவாகுப்பற்று பொதுமக்களின் திருவிழா இடம்பெறும்.  நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை ஆகிய 05 ஊர்களைச்சேர்ந்த மக்களின் பங்களிப்புடன் இத்திருவிழா இடம்பெறுகிறது. திருவிழாவுக்கான பட்டுக்கொணரும் நிகழ்வு இம்முறை நற்பிட்டிமுனை வட்டாரப்பிரதிநிதி உதயகுமாரின் வீட்டிலிருந்து ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்படும்..

கடைவழங்கும் நிகழ்வு
ஆலய திருவிழாக்காலங்களில் கடைகள்  அமைப்பதற்கு கடைவழங்குகின்ற சம்பிரதாயபூர்வமான நிகழ்வு நாளை 05ஆம் திகதி பிற்பகல் 3மணியளவில் இடம்பெறும். கடைகளை பெறுவோர் உரிய வேளைக்குவந்து பணத்தைச்செலுத்திபற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு தலைவர் சுரேஸ் தெரிவித்தார்.

You may like these posts

Comments