(ஷமி.மண்டூர்) மட்டக்களப்பு பிரதேச நீண்ட பாரம்ரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக்கோலஙகளையும் இயற்கையோடியைந்த இறைவழிபாட்டினையும் மெருகு குறையாது இன்னும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு.
மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த மண்டூர்.அமைந்துள்ளது தில்லை மரங்கள் அடந்த காட்டில் இளந்தென்றல் மெய்லென வீசும் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகும் முருகப்பெருமானார் சூரபத்மனைத் சங்கரித்த வேலாயுதத்தில் பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்தமலையிலும்.இன்னொன்று திருக்கோவில் வெள்ளைநாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூர் தில்லைமரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன.என்பது கர்ண பரம்பரையின் ஐதீகக் கதை
தில்லை மண்டூர் முருகனின் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது மிகவும் விமரிசையாக ஆகஸ்ட் மாதம் 9ந் திகதி ஞாயிறு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் எம்பெருமானின் திருவிழா நடைபெற்றுவருகின்றது. ஆகஸ்ட் மாதம் 29ந் திகதி சனிக்கிழமை இன்று காலை 9.00 மணியளவில் கலியுக கந்தன் புஷ்பக வாகனத்தில் அமர்ந்து ஆலயத்திலிருந்து தீர்த்த உற்சவத்திற்கு தீர்த்தக்கரையை நோக்கி புறப்படுவார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!