Contact Form

Name

Email *

Message *

புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெட…

Image
புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதன்போது பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

தொழில் நியமனம் கிடைக்காதவர்கள் முன்வைத்திருந்த மேன்முறையீடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may like these posts

Comments