அம்பாறை மாவட்டம் பாணம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாகம எனுமிடத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவசர் பலியாகியுள்ளதாக பாணம பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி அப்புஹாமி ஞானரெட்ண (வயது 46) என்பவர் அங்குள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த காட்டு யானை ஒன்றினால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டு அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் பாணம வைத்திய சாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து பாணம பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!