Contact Form

Name

Email *

Message *

இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கட்சிகளின்  ஆதரவாளர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்…

Image
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கட்சிகளின்  ஆதரவாளர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை (29) தெரிவித்தனர்.


அக்ரைப்பற்று அரசையடியில் உள்ள தேநீர் கடை உரிமையாளரான முகம்மது அபூபக்கர் சலீம் (வயது 48) என்பரே இந்த மோதலில் காயமடைந்துள்ளார்.   தாக்குதலுக்கு உள்ளான நபர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் என்பதற்காக அவரது கடையினுள் புகுந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்  தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டில் தெரித்தததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரையில்  மூன்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

You may like these posts

Comments