கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ (17.07.2015) அன்று சிறப்பாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் எழுந்தருளிய முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார். அங்கு இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. ஆலய வண்ணக்கர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற கிரியைகளை ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நடாத்தி வைத்தார்.
கதிர்காம யாத்திரைக்காக நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வருகை தந்த அதிகளவான யாத்திரியர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கியிருந்து 17.07.2015 அன்று இடம்பெற்ற கொடியேற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களது புனிதப்பணயத்தை உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து மேற்கொண்டனர். 17ம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் கொடியேற்றத்தினை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவுடனும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவத்துடனும் இவ்வருட திருவிழா நிறைவுறவுள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!