BY - koviloor Selvarajan
"கல்கிதாசன் கவிதைகள்" என்ற கவிதைத் தொகுப்பு நூல் கடந்த மாசி மாதம் இருபதாம் நாள்,ஞாயிறு அன்று,
தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. செல்வி.சிந்துஜா. கனகசபை அவர்களின்
தமிழ் வணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வுக்கு திருக்கோவில் பிரதேச செயலர் திரு.வி.அழகரெட்ணம்
அவர்கள் தலைமை தாங்கினார்.
வரவேற்பு உரையை,குருகுலம் முகாமைப்பணிப்பாளர் திரு.க.இராசரெத்தினம் அவர்கள் நிகழ்த்தினார்.
"செங்கதிர்"சஞ்சிகையின் ஆசிரியரும்,எழுத்தாளரும்,விமர்சகருமான திரு,ரி.கோபாலகிருஷ்ணன் அவர்கள்
நூலை அறிமுகம் செய்து வைத்து,பின்பு வெளியிட்டு வைத்தார்.
விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் திரு.கோ.பரஞ்சோதி,ஆசிரியை திருமதி.ஜெகதீஸ்வரி.நாதன்,
தாண்டியடி மகாவித்தியாலய ஆசிரியர் திரு, ஞா.விநாயகமூர்த்தி ஆகியோர் தங்களுக்கு உரிய பாணியில்
கவிதை நூலை ஆய்வு செய்தார்கள்.
தமிழ்நாடு,சென்னை மித்ர பதிப்பகத்தார் மிக கச்சிதமாக,கைக்கு அடக்கமாக, உயர் ரக அச்சுத் தாள்களில்
இந்த நூலை அழகாக வடிவமைத்திருக்கின்றார்கள்.
இக் கவிதை நூலுக்கு தமிழ் நாடு,பெருங் கவிக்கோ திரு.வா.மு.சேதுராமன் அவர்கள் வாழ்த்துப் பாக்களை
வழங்கியிருகின்றார்.திருக்கோவில் இரா.தெய்வராஜன் அவர்கள் மிக நேர்த்தியாக அணிந்துரை அளித்துள்ளார்.
எழுத்தாளர் திரு. நவம் அவர்கள் அருமையான வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.""இது பற்றியும்"
என்ற தலைப்பில், தனது நீண்டகால நண்பரும்,இலக்கிய சகாவுமான திரு.கனக்ஸ் பற்றியும்,அவரது
இலக்கிய தாகங்கள் குறித்தும் பதிவு செய்திருக்கின்றார் திரு.சிறீனோ சிறீ சிறீசு அவர்கள்.
தமிழ் நாட்டு ஓவியர் திரு.புகழேந்தி அவர்களும்,கனடா,சிறீனோ சிறீ சிறீசு அவர்களும் ஓவியங்களையும்,
படங்களையும் நூலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் மிகப் பொருத்தமாக கொடுத்து,நூலை அழகுபடுத்திஇருக்கிறார்கள்.
முப்பத்திமூன்று தமிழ் கவிதைகளும்,இரண்டு ஆங்கிலக் கவிதைகளையும் உள்ளடக்கிய இந்த நூல் .நூலாசிரியரின்,
பழைய,புதிய கவிதைகளை கொண்டதாக இருக்கின்றது.முதலில் இந்நூல் எமது ஊரில் வெளியிடபட்டாலும்
தொடர்ந்து இக் கவிதைநூல் லண்டனிலும்,கனடாவிலும் விரைவில் வெளியிடப்படும் என்று அறியமுடிகிறது.
எமது பகுதி படைப்பாளிகளை கௌரவப் படுத்தி வருகின்ற எமது இணையத்தளம்.திரு. கல்கிதாசன் அவர்களின்
இந்த முயற்சிக்குப் பாராட்டுவதுடன்,தொடர்ந்தும் அவர் நல்ல படைப்புகளை தர வேண்டும் என்று வாழ்த்துகிறது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!