அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் புதிய கிளை, இன்று திங்கட்கிழமை(23) சுப வேளையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர் மற்றும் சபையின் பணிப்பாளர்கள் ஆகியோரின் அழைப்பின் பேரில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஷ்வின் த.சில்வாவினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு தம்பிலுவில் பிரதான வீதியில் (பழய மேகலா தியட்டர்) புதிதாக நிர்மாணித்துள்ள கட்டடத்தில், தேசிய சேமிப்பு வங்கியின் 237ஆவது கிளையாக தம்பிலுவில் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 367ஆவது ஏ.ரீ.எம். இயந்திரமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வங்கி அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட வாடிக்கையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு தேசிய சேமிப்பு வங்கியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.






