கிழக்கிலங்கையின் தொன்மை மிக்கதும் மிகவும் சிறப்புமிக்கதுமான ஆலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ உகந்தை முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வானது உகந்தை முருகனின் திவ்ய ஆசி மற்றும் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சீதாராம்குருக்கள் அவர்களின் ஆசியுடனும் கடந்த 2014.08.10 ஞாயிறன்று இடம் பெற்றது. இத்தீர்த்தோற்சவ நிகழ்வின் போது கிழக்கிலங்கையின் ஏராளமான பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் இத்தீர்த்தோற்சவ நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவனத்தினரினால் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட 6 அடி உயரமும், 88mm விட்டமும், 24மணிநேரம் தொடர்ந்து எரியக்கூடிய பிரம்மாண்ட ஊதுபத்தி சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவனத்தின் உறுப்பினர்களினால் ஏற்றப்பட்டது. இன் நிகழ்வில் உகந்தை முருகன் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சீதாராம்குருக்கள், உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் மு.சுவேந்திரகுமார், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிபாளர் கண.இராசரெத்தினம் மற்றும் கிழக்கு பிராந்திய சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவன மேற்பார்வையாளர் ஏ.ரவீந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட விற்பனைப் பிரதிநிதி எஸ்.தனுசன், மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகாமையாளர் கே.இந்திரகுமார், அம்பாறை மாவட்ட விற்பனைப்பிரதிநிதி வி.சுதாகரன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.






