மகா சிவராத்திரியை முன்னிட்டு "தம்பிலுவில் காயத்திரி தபோவனத்தில்" பிரம்மகுமாரிகளினரினால் நடாத்தப்படும் பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதிர் லிங்க தரிசனம் 2014.02.26, 27, 28 திகதிகளில்(புதன், வியாழன், வெள்ளி)தினங்களில் இடம் பெறவுள்ளது. இவ் ஜோதிர் லிங்க தரிசனம் நிகழ்வில் காணப்படும் "வீஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்யநாத், நாகேஸ்வரர், இராமேஸ்வரம், கிருஷ்ணேஷ்வர், பீமாசங்கர், கேதர்நாத், ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், மல்லிகார்ஜீன், சோமநாத்" ஆகிய 12 ஜோதிர் லிங்கங்களும் இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையும், மகிமையிம் வாய்ந்தவையாகும். அத்துடன் இங்நிகழ்வின் போது ஜோதிர் லிங்க தரிசனத்துடன் விசேடமாக ஆத்மா, பரமாத்மா, உலக நாடகம் பற்றிய கண்காட்சி மற்றும், உங்களின் குறைதீர்த்து மனசாந்தி அளிக்கும் யாக குண்டம் மற்றும் தியான அனுபவம் ஆகியனவும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அன்பார்ந்த ஆன்மீக அடியார்கள் அனைவரினையும் அன்பாக அழைக்கின்றனர் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர்.
12 ஜோதிர் லிங்க தரிசனம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு "தம்பிலுவில் காயத்திரி தபோவனத்தில்" பிரம்மகுமாரிகளினரினால் நடாத்தப்படும் பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதிர் லிங்க தரிசனம் 2014.02.2…
