(R.Sayan) தீபாவளித் திருநாளையொட்டி மும்மத பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீபத் திரு நாள் நிகழ்வு’ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.அதிபர் பி.சந்திரேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவ ட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமல நாதன், பிரதம அதிதியாகவும், வலயக் கல் விப் பணிப்பாளர்களான ஆர். சுகிர்தரா ஜன், என். குருவிட்ட மற்றும் கோட்டக் கல் விப் பணிப்பாளர் வீ.குணாளன், மும்மதங்க ளின் மதப்பெரியார்கள் என பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர். வித்தியாலய முதன்மை நிலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது இன ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் மும்மத பெரியார்கள், மாணவர்களை ஒன்றிணைத்து விசேட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல மேடையேற்றப்பட்டதுடன் தீபாவளித் திருநாளின் முக்கியத்துவம் பற்றிய விசேட சொற்பொழிவுகளும் இடம் பெற்றன.




























