(திருக்கோவில் சு.கார்த்திகேசு)
திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்திலான கிரிகெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் 8ஆம் திகதி(சனி) திருக்கோவில் அரியநாயகம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இதன் போது விளையாட்டு வீரர்கள் தேசீய கீதம் இசைத்து போட்டிகளை ஆரம்பிப்பதையும், வெற்றி பெற்ற விளையாட்டு கழகங்களுக்கு பிரதம அதிதயாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன,மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்,திருக்கோவில் இரானுவ அதிகாரி லெப்டினல் எச்.வி.ஏ.எஸ்.வெல்வத்த மற்றும் அதிகாரிகள் கிண்ணங்களையும் பணப் பரிசுகளையும் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம். இவ்விளையாட்டுப் போட்டியில் தம்பிலுவில் றேன்சஸ் கிரிகெட் அணிக்கும் அட்டாளைச்சேனை பைனா கிரிகெட் அணிக்கும் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் 24 ஓட்டங்களால் தம்பிலுவில் றேன்சஸ் அணி கிண்ணத்தை சுவிகரித்து கொண்டதுடன் கால்பந்து போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் கால்கந்து விளையாட்டுக்கழகத்துக்கும் விநாயகபுரம் மின்னொளி கால்பந்து விளையாட்டுக்கழகத்துக்கும் இடையில் இடம்பெற்ற விறுவிறுப்பான இறுதிபோட்டியில் விநாயகபுரம் மின்னொளி கால்பந்து விளையாட்டுக்கழம் பெனாட்டி முறையில் கிண்ணத்தையும் பணப்பரிசுகளையும் சுவிகரித்துக் கொண்டது
குறிப்பிடத்தக்கது.
