Contact Form

Name

Email *

Message *

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் கொள்ளை நகை,பணம் பொருட்கள் திருட்டு நள்ளிரவில் கொள்ளையர் கைவரிசை - தம்பட்டை பகுதியில் சம்பவம்.

(திருக்கோவில்  சு.கார்த்திகேசு) திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை 2 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு,கடை உடைத்து திங்கள் இரவு (10 ஆம் திகதி )நள்ளிரவில் கொள்ளைய…

Image
(திருக்கோவில்  சு.கார்த்திகேசு)
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை 2 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு,கடை உடைத்து திங்கள் இரவு (10 ஆம் திகதி )நள்ளிரவில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தம்பட்டை 02 திருமதி ஞானேந்திரன் வள்ளியம்மை என்பவரின் வீடு,கடை என்பன உடைக்கப்பட்டு சுமார் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் பணமும்,8பவுண் தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் மீள் நிரப்பு அட்டைகள் என்பனவும் கொள்ளையர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை ஐன்னல் பகுதியால் உள் நூழைந்து ஏதோ ஒருவகையான மயக்க மருந்துகளை முகத்தில் பூசிவிட்டு கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 (திருக்கோவில்  சு.கார்த்திகேசு)

You may like these posts