திருக்கோவில் கல்வி வலயத்தினால் இவ்வாண்டு புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மண்டாணை திகோ/ மண்டாணை தமிழ் கலவன் பாடசாலைக்கு இளையதம்பி சிநேந்திரன் (அதிபர்) அவரிகளின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரும் வைத்தியருமான எஸ். பாஸ்கரநாதன் அவர்களினால் மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 26 பேருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வு 22ஆம் திகதி பாடசாலையில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் எஸ்.பாஸ்கரநாதன் அவர்களினால் 26 மாணவரகளுக்கும் மற்றும் அதிபர் ஆகியோருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகீர்தராஐன் தொழில் அதிபரும் கண்டி வர்த்தகச் சங்கத்தின் செயலாளருமான என்.லோகநாதன் முன் பள்ளி பாடசாலைகளின் இணைப்பாளர் எஸ்.தர்மபாலன் அபிவிருத்தி உத்தியோகத்தர என்.ருஷாந்தன் , கிராம சேவகர் ஏ.ஜீவேந்திரகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்