(திருக்கோவில் பிரதேச செய்தியாளர் சு.கார்த்திகேசு)
சர்வதேச தொழிலாளர் தினம் இமமுறை முதன் முதலாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன் போது மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும். மற்றும் ஆசிரியர்கள் சுகந்திரமாக இயங்க வவழிவிடுக! கல்வியில் சமவாய்ப்பை உறுதிப்படுத்துக!போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் மேலும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படல் அவசியம்,இடமாற்றம் முறையாக சீராக்கப்படவேண்டும்,தேசிய மாகாண பாடசாலை ஏற்றத்தாழ்வு நீக்கப்படவேண்டும், மேலதிக ஆசிரியர் என்ற பகுதி உடனடியாக நீக்கப்படவேண்டும்,வருடமத்தி இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும். திருக்கோவில் மட்டு.மேற்கு வலயங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்,கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கு நடமாடும் சேவை அவசியம், கஸ்டப் பிரதேச பாடசாலை ஆசிரியரை மையப்படுத்தியதாக அமைதலவசியம்,தொழிற் சங்க செயற்பாமுகளுக்கு ஆதரவு தேவை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் சுலோப் பதாதைகளை தாங்கிச் சென்றிருந்தனர்.அத்துடன் மின் கட்டண உயர்வுக்கும் எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிர்யர்கள் சுலோகங்களை ஏந்தி சென்றனர்.இவ் மே தினக் கூட்டமானது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருக்கோவில் வலய செயலாளர் பா. சுந்திரேஸ்வரன் (அதிபர்) அவர்களின் தலைமையில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான வி.டி சகாதேவராஐh அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் மட்டக்களப்பு, அமபாறை ஆகிய பாடசாலைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்து தமது உரைகளை ஆற்றியிருந்தனர்.இதன்போது கல்வித்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிபர் எஸ்.சுந்தரமூர்த்தி,ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.குணாலன், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான வி.டி சகாதேவராஐh ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.




