அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (24 வெள்ளி ) காலை திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு பூரணை பூசையில் கலந்து கொண்டோருக்கு அங்கு வழங்கப்பட்ட பிரசாதம் (கடலை) ஒவ்வாமை காரணமாக பலர் திடிர் சுகயினமுற்ற நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகீச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ் கடலையை உட்கொண்ட சுமார் 33 பேர் இவ்வாறு மயக்கம், வாந்தி போன்ற திடிர் சுகயினமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகீச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு சிறுமி மட்டும் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் மாவட்ட வைத்திய அதிகாரி எம். தமிழ்தாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில் 12 சிறுவர்களும், 12 பெண்களும்,09 ஆண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது சம்மந்தமான விசாரனைகளை திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரும்,இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
