திருக்கோவில் பிரதேசத்தில் ஆலயம் ஒன்றில் பூஜையின் பின்னர் வழங்கப்பட்ட கடலையை உண்ட பக்தர்கள் 33 பேர் சுகயீனம் உற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதையடுத்து பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது
இப் பிரதேசத்தில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் இன்று காலை 6.00 மணிக்கு ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டின் பின்னர் கடலை வழங்கப்பட்டுள்ளது இதனை ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் வாங்கி உண்ட நிலையில் காலை 7.00 மணியளவில் இவர்களுக்கு வாந்தி மற்றும் தலைச்சுற்று, வயிற்றுளைவு மயக்கம் போன்றவை ஏற்பட்டதையடுத்து உடனடியாக திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலையில் அவசர சிகிச்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில் 12 சிறுவர்கள், 12 பெண்கள் ,9 ஆண்கள் உட்பட 33 பேரை அனுமதிக்கப்பட்டுசிகிச்சை இடம்பெற்று வருகின்றனர் இதில் 3 வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனவும் இவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் பயப்பிடும் அளவிற்கு எதுவும் இல்லைஎனவும் வழங்கப்பட்ட கடலையை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலை பணிப்பாளர் எம் .தமிழ்தாசன் தெரிவித்தார்
இதேவேளை வைத்தியசாலைக்கு மக்கள்படை யெடுத்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ,பிரதேச சபைதவிசாளர் புவிர்தராஜன், ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று அனுமதிக்கப்ப ட்டவர்களை பார்வையிட்டுள்ளனர்
