
தம்பிலுவில் அருணோதயா வித்தியாலய பொருட்காட்சியும் கௌரவிப்பு விழாவும் பாடசாலை மண்டபத்தில் புதன்கிழமை அதிபர் ஆர்.எம்.அன்ரன் தலைமையில் நடைபெற்றது.இவ் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்,கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.தவராஜா ,ஆகியோர் கலந்துகொண்டு ஓய்வுபெற்ற அதிபர் சு.நடேசு ஓய்வுபெற்ற ஆசிரியார்களான திருமதி கணேஸ்வரி வன்னியசிங்கம், திருமதி சின்னமலர் சீனித்தம்பி, தங்கேஸ்வரி நடராசா ஆகியோரை பென்னாடை பேர்த்தி பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவித்ததுடன் பாடசாலை மாணவர்களின் கைப்பொருட்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்


















