அன்பிற் இனிய Thirukovil.com வாசகர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
திருக்கோவில் வினாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மகா கும்பாவிசேஷகத்திற்கான உதவி கோரல்.
சைவ நெறி தழைத்தோங்க ஈழ புலம்பெயர் தமிழர்களால் சைவத்தையும்,தமிழையும் இரு கண்களாக மதித்து வளர அயராது பாடுபட்டுவரும் உங்கள் அனைவருக்கும் வினாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் (இலங்கை) சார்பாக உளம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வினாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் இவ் ஊரில் கடந்த காலங்களில் பல சமய சமூகப் பணியாற்றி வந்தது.பல்லாயிரம் மக்களுக்கு ஆத்ம ஈடேற்றத்திற்காக உதவியாக செயற்பட்டது. இக்கிராமத்தில் கடந்த காலங்களில் பல பாதிப்புக்கள் வந்த போதும் இங்குள்ள மக்களுக்கு நிழலாக இருந்து உதவி செய்த பெருமை இவ் ஆலயத்திற்குண்டு, இங்கு வாழ்கின்ற மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் இவர்களினால் கட்டப்பட்ட ஆலயம் கடந்த சுனாமியின் போது முற்றாக சேதமடைந்தது. சேதடைந்த இவ் ஆலயத்தை இப்பிரதேச பரோபகாரிகளின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் 05.07.2012 ஆம் திகதி கும்பாவிசேஷகம் நடைபெறவுள்ளதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
05.07.2012 ஆம் திகதி நடைபெறவுள்ள கும்பாவிசேஷகத்திற்கு பெருமளவு நிதி ஒருமித்து தேவைப்படுவதால் Thirukovil.com வாசகர்களாகிய உங்களிடம் கையேந்தி நிற்கின்றோம். கருணைகூர்ந்து கும்பாவிசேஷகம்மேற்கொள்வதற்கு உங்களால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி அன்னையவளின் அருளைப்பெற்றேகுமாறு தங்களை மிக பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
உங்களது சிறு உதவி இங்கு ஆலய மூலமான சமய பணி நடைபெற பேருதவியாக அமையுமென எதிர்பார்த்து வாசகர்களாகிய உங்களிடமிருந்து சாதகமான பதில் வருமென எதிர்பார்த்து கார்த்து நிற்கின்றோம்..
விபரங்கள்.
The President
Sri Pathirakali Amman Temple Conservation Society
Kali kovil road, Vinayagapuram-03, Thirukkovil. Sri Lanka.
Telephone : - President :- +94 77 2242248
Bank details :-
Hatton National Bank :- Thirukovil
Accounts Number :- 134020020332
தலைவர்
ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்
வினாயகபுரம்
ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்
வினாயகபுரம்