Contact Form

Name

Email *

Message *

கணவர் காணாமல் போனதால் மனைவி தற்கொலை; கணவர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்ட நிருபர் கணவன் குளத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன சம்பவத்தையடுத்து மனைவி சோகம் தாங்காது நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டு திருமணபந்தத்தில் ஒன்றினைந்தவர…

Image
அம்பாறை மாவட்ட நிருபர்

கணவன் குளத்தில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன சம்பவத்தையடுத்து மனைவி
சோகம் தாங்காது நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டு திருமணபந்தத்தில்
ஒன்றினைந்தவர்கள் இணைபிரியாது உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை
திருக்கோவில் கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் பிரதேசமே
சோகமயமாகவுள்ளது.
திருக்கோவில் கஞ்சிக்குடியாற்று குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
மீன்பிடிக்க சென்ற கஞ்சிக்குடியாறு பிரதேசத்தை சேர்ந்த மீனவரான நான்கு
பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய செல்லத்துரை நடேசப்பிள்ளை காணாமல் போன
இவரை தேடிகிடைக்காத நிலையில் இவரது மனைவியான 55 வதுடைய அலகோஸ்வரி
திங்கட்கிழமை மாலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
ஓப்படைக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன கணவர் குளத்தில் சடலமாக
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம்
பிரோதபரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
ஓப்படைக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்சம்பவத்தையடுத்து பிரதேசமே சோகமயமாகவுள்ளது
---

You may like these posts

Comments