திருக்கோவில் கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் நேற்றுஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போயுள்ளார் என திருக்கோவில் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்தஜெயசூரிய தெரிவித்தார்
கஞ்சிக்குடியாறு பிரதேசத்தை சேர்ந்த மீனவரான 62 வயதுடைய செல்லத்துரை
நடேசப்பிள்ளை என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் சம்பவதினம் மாலை 5 மணிக்கு
வழமைபோல கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் இரவு 7 மணியாகியும்
வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச்சென்ற போது குளத்தின் கரையில்
கல்ஒன்றின் மீது வலை இருப்பதையும் தோணி தண்ணீரில் மூழ்கிய நிலையில்
இருப்பதையும் மீனவரை அங்கு தேடியும் காணவில்லை
இது தொடர்பாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து
பொலிசார் அங்கு தேடுதல் நடாத்தி அவரைக் கண்டுபிடிக்கவில்லை எனவும் சிலவேளை
இவரை முதலை கடித்து இழுத்துச் சென்றிருக்கலாம் எனவும் குளத்தில் நீர்மட்டம்
அதிகரித்து இப்பதால் கடற்படையின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடாத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இத தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!