அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இன்று (2012 – 01 - 15) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்இ உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' (குறள்)
என்று பொய்யாமொழிப்புலவரால்இ உலகப்பொதுமறையில் போற்றப்படும் உழவுத் தொழிலேஇ தைப்பொங்கலின் அடிப்படை. பொதுவாக தைமாதமானதுஇ வயல்களில் அறுவடை தொடங்கும் காலமாகவும் இருப்பதால்இ உழவுத் தொழிலுக்கு கைகொடுத்துஇ உழவரை வாழவைக்கும் சூரியனுக்கு விழாவெடுக்கும் நாளாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சூரிய வழிபாடு மிகப் பழைமையானது. பல நாகரிகங்களிலும் வளர்ச்சி பெற்றிருந்த சூரிய வழிபாடுஇ தமிழர் மத்தியில்இ சங்கமருவிய காலத்தில் (கி.பி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகள்) கூட வழக்கத்திலிருந்தது எனலாம். அக்கால இலக்கியமான சிலப்பதிகாரத்தின் வாழ்த்திலேயேஇ 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று தான் தொடங்குகிறார் இளங்கோ அடிகள்.
சூரிய ஒளி இன்றேல்இ தாவரங்களால் ஒளித்தொகுப்பு எனும் உயிரியல்செயற்பாட்டை நடத்திஇ உணவு தயாரிக்கமுடியாது என்பது விஞ்ஞானம் கூறும் உண்மை. இந்த உண்மையை என்றோ உணர்ந்திருந்த நம் முன்னோர்கள்தான்இ வேளாண்மைச் செய்கையில் சூரியனின் இன்றியமையாமையை உணர்ந்துஇ அந்த வளத்தைத் தந்த இயற்கைக்கு நன்றி செலுத்துமுகமாக தை மாதத்து முதன்னாளை தைப்பொங்கலாகக் கொண்டாடத் துவங்கினர்.
இதுஇ உழவர் திருநாள் என்றுஇ ஒரு வகுப்பினர்க்கு மட்டும் வகுக்கப்பட்ட விழா அல்ல. முழுத் தமிழரும் சாதி – மத – பேதம் கடந்து கொண்டாடும் பண்டிகை. தமிழனின் தொன்மையை – அவனது உழைப்பின் பெருமையை – நன்றி மறவா நற்பண்பை - உறவுகளோடு நெருக்கத்தை வளர்க்கும் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் கூறும் உன்னதப் பெருவிழா!
தமிழகத்தில்இ தைப்பொங்கலின் தொடர்ச்சியாக நாளை பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஈழத்தில் தைப்பூசமன்றே பட்டிப்பொங்கல் கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உழவியந்திரங்கள் – அறுவடை இயந்திரங்களின் அறிமுகத்துக்கு முன்இ விவசாயிக்கு தோள் கொடுத்துஇ அவனோடு இணைந்து வருந்தி உதவிய எருதுகளுக்கும்இ பாலை வழங்கியும்இ சாணம்இ திருநீறு போன்ற ஆன்மிக அடையாளங்களை வழங்கும் பசுக்களுக்கும் விழாவெடுக்கும் திருநாள். கேவலம் மிருகம்தானே என்று ஒதுக்காமல்இ அவற்றையும் ஒரு உயிராய் மதித்துஇ அவற்றுக்கு நன்றி செலுத்தக்கூட ஒரு நாளையே ஒதுக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள் எனும்போது அவர்களது சீவகாருணியத்தை நினைந்து பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை.
தமிழர் திருநாள்இ இவ்வருடமும் நமது பிரதேசத்தில் வழக்கம்போல களைகட்டியுள்ளது. புத்தாடை புனைந்து பொங்கி மகிழ்ந்துஇ ஆலயம் சென்று வழிபடுவதோடு நிறுத்திவிடாமல்இ வழியில் எங்கேனும்இ ஏழைகள்இ பிச்சைக்காரர்கள் கண்டால்இ அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்துவிட்டு வாருங்கள். அப்போது அவர்கள் மனம்நிறைந்து அடையும் மகிழ்ச்சியும்இ மனமார அவர்கள் தரும் ஆசீர்வாதமும் தான் உங்களுக்கு உண்மையான செழிப்பையும் தைப்பொங்கலின் முழுமையான மகிழ்ச்சியையும் தரும்! வாழ்த்துக்கள்!
Thanks- V.Thulanjanan
---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!