தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - 1 (ஆலய வரலாறு)
BY-Thulanch Viveganandarajah
கற்பரசி கண்ணகி...! சிலம்பின் நாயகி! அறங்கடந்த பாண்டியனுக்கு மறக்கருணை புரிந்த மாதரசி! உலகெலாம் வாழும் தமிழரில் அவளை அறியாதார் கிடையாது.
மட்டக்களப்புக்குத் தெற்கேஇ 69 கி.மீ தொலைவிலுள்ள தம்பிலுவிற்பதியின் இதயத்தானமெனஇ கிராமத்தின் நடுவண் அமைந்து விளங்குகிறது அம்மன் ஆலயம்.
ஆலய அமைப்பு:-
ஆலும் தெங்கும் வம்மியும் நிறைந்து அடர்சோலையாய்க் காட்சியளிக்கும் அழகான அமைவிடம். மேற்கே குளிர்தென்றலைப் பரப்பியவாறு பெரியகளப்பென்னும் வாவி ஆலயத்தை அணிசெய்து நிற்கும். தெற்கே நன்செய் நிலமாகவும்இ மாரி காலத்தில் வாவியின் வெள்ளத்தால் நிரம்பி இன்னொரு வாவியாகவும் காட்சி தரும் 'பள்ளவெளி'யெனும் வயற்பரப்புஇ இத்தகைய இரம்மியமான சூழலில் தான் அமர்ந்து அருள் புரிகிறாள் கண்ணகித் தாய்
.

ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியே நுழைந்தோமானால்இ சற்று இடப்புறம் தென்படுவது தீராப்பிணிதீர்க்கும் தீர்த்தக்கேணி. நோயாளர்கள் இதில் நீராடி நோய்நீங்கிய விந்தையையும்இ பூச்சிநாசினிகள் அறிமுகமாகாத காலத்தில்இ இந்நீர் தெளிக்கப்பட்ட வயல்கள்இ பீடைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அற்புதங்களையும் இவ்வூர்முதியவர்கள் கதை கதையாய்ச் சொல்வார்கள்.
அம்மன் ஆலயத்தின் ஓடு வேய்ந்த மடாலய அமைப்புஇ கேரளத்துப்பாணியை ஞாபகமூட்டுவதுடன்இ இவ்வாலயத்தின் பழமைக்கும்இ சேரநாட்டுடனான மட்டக்களப்புத் தமிழகத்தின் பூர்வீகத் தொடர்பிற்கும் ஆதாரம்கூறி நிற்கின்றது.
வடக்கு நோக்கிய கருவறைஇ அதையடுத்துள்ள இருமண்டபங்கள்இ அதற்கு வெளியே அடியார் குழுமும் தரிசனமண்டபம். இவற்றைக்கொண்ட எளிய அமைப்பில்தான் ஆலயம் அமைந்துள்ளது. கருவறையும் அதையடுத்துள்ள அர்த்தமண்டபமும் விழாக்காலம் தவிர்ந்த நாட்களில் மூடியே இருக்கும்.
மூடப்பட்டுள்ள திருக்கதவின்முன்னே அம்மையின் ஓவியம் எழுதிய திரை ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். வாராந்தப்பூசைகளும்இ நேர்த்திக்கடன் பூசைகளும் இவ்விடத்திலேதான் இடம்பெறுகின்றன.
ஆலயம் இரு திருச்சுற்றுக்களைக்(வீதி) கொண்டது. இவற்றில் பிள்ளையார்இ நாகதம்பிரான்இ வைரவர் ஆகிய பரிவாரதேவதைகளுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயக் கிழக்குவாசலுக்கு நேரெதிரே தென்படுவது பிள்ளையார் சன்னதி ஆகும். ஆரம்பகாலத்தில் மேடையொன்றில் அமர்ந்திருந்த பிள்ளையாருக்கு காலப்போக்கில் அமைக்கப்பட்ட சிறு கருவறைஇ அண்மையில் திருத்தப்பட்டுஇ குடமுழுக்குச் செய்யப்பட்டுஇ இன்றையநிலையில் காட்சியளிக்கிறது.
உள்வீதியின் தென்கிழக்கு மூலையில்இ நாகதம்பிரான் சன்னதியை தரிசிக்கலாம். முன்பு உள்வீதி வாயிலில் மேற்கு நோக்கி அமைந்திருந்த இதுஇ தற்போது புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கும் கண்டிருக்கிறது.
வெளிவீதியில்இ அம்மன் சன்னதிக்கெதிரேஇ தெற்குநோக்கிஇ வைரவர் சன்னதி அமைந்துள்ளது. அண்மைக்கால திருப்பணிகளுக்குப் பிறகுஇ இச்சன்னதிஇ ஆலய தரிசனமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலம்காலமாக வழிபடப்பட்டுவரும் வைரவர் தடிகளே இங்கு பூசிக்கப்படுகின்றன.
இவற்றைத் தவிரஇ விழாக்காலங்களில் மட்டும் பூசிக்கப்படும்இ அட்டதிக்குப்பாலகர்களுக்கான எட்டு பலிபீடங்கள் உள்வீதியின் வெளிச்சுவரைச்சார்ந்து அமைந்துள்ளன.
பழம்பெருமை வாய்ந்த இவ்வாலயம் இன்றும் சுமார் 300 வருடங்களை அண்மித்த பழைமை மாறாமலேயே காட்சி தருகிறது. 2000ஆம் ஆண்டளவில் ஆலயம் குடமுழுக்குக் கண்டபோதும்இ பழைய அமைப்பு மாறாத வகையிலேயே திருப்பணி செய்யப்பட்டு இன்றைய தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
தேவியின் சிறப்பு :-
கருவறையிலுள்ள விக்கிரகம் சுமார் 1' உயரமானது. வைகாசிப் பொங்கல் வேளையில் மட்டும் தரிசிக்கக்கூடிய அந்த விக்கிரகத்தின் அழகுஇ வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது.
தேவியின் விக்கிரகம் வயதுமுதிர்ந்த கருணை நிறைந்த மூதாட்டியொருத்தியைப் போலவே காட்சிதருகிறது. இவ்வூர் மக்களால் 'அம்மம்மா' என்றும்இ வன்னி மக்களால் 'அம்மாளாச்சி' என்றும் உரிமையுடன் கொண்டாடப்படும் கண்ணகைத்தாய்க்குஇ அவ்வுரிமைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதைஇ அம்மனைத் தரிசிப்பதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
வலக்கரத்தில் வேப்பங்குழை ஏந்தி இடக்கையைத் தொங்கவிட்டுஇ அள்ளிமுடிந்த கொண்டைஇ நீண்டுதொங்கும் காதணிஇ விபூதிபரந்த நெற்றிஇ கருணை ததும்பும் கண்கள் எனப் பழங்கால தமிழ்மறவப்பெண்ணாகக் காட்சி தரும் அவள்தன் அழகோ அழகு! நடுவயதை எட்டிய முதிர்ந்த குடும்பத்தலைவி ஒருத்திக்குரிய கம்பீரம்இ பெருமிதம்இ தாய்மைஇ கருணை யாவுமேஇ அவள் முகத்தில் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.
அன்னையைத் தரிசிக்கும் எவர்க்குமேஇ தன் தாயை அல்லது பாட்டியைக் காணும் உணர்வு தோன்றுமே தவிரஇ தெய்வத்தின்முன் நிற்கும் உணர்வே தோன்றாது. எத்தனைபேரால் இழித்துரைக்கப்பட்டாலும்இ கடவுளுக்கும் அடியவனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதில்இ கிராமியவழிபாடு வெற்றிகண்டுவிட்டது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!மூலவிக்கிரகத்தைத் தவிரஇ உற்சவரும் இங்கு உண்டு. அபயம்இ வரதம்இ சிலம்புஇ வேப்பங்குழை என்பவற்றை ஏந்திஇ நாற்கரத்தினளாகஇ தன் தெய்வவடிவில் கண்ணகி காட்சி தரும் கோலம் அது! அளவிற்சிறியதும் காலத்தாற் பிற்பட்டதுமான இவ்விக்கிரகமேஇ ஊர்வலத்திலும்இ திருவீதியுலாவிலும் பங்குகொள்கிறது.
இவற்றைத் தவிரஇ திருவீதியுலாவில் முக்கியத்துவம் பெறுவதுஇ அம்மன் முகக்களை ஆகும். ஏடகஞ் செய்து அம்மனை ஊர்வலத்துக்கு எடுத்துச் செல்லமுன்இ முன்னாட்களில்இ இம்முகக்களையேஇ ஊர்வலஞ் சென்றதாக பெரியோர் சொல்வர். வேப்பிலை – கமுகம்பாளை என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டுஇ அடியவர் ஒருவரால் சுமக்கப்பட்டுஇ வீதியுலாஇ ஊர்வலம் என்பவற்றில் பங்குகொள்ளும் அம்மன் முகக்களையிலேயேஇ அம்மன் எழுந்தருளுவதாக சொல்லப்படுகிறது.
அதற்குக் கட்டியம் கூறுவதுபோல்இ அதைச் சுமப்பவர்இ சிலவேளை சுயநினைவிழப்பதையும்இ இருந்தாற்போல் அதுஇ தானாகவே சிலிர்த்தாடுவதையும் இன்றும் உற்சவ காலத்தில் கண்டு நெகிழலாம்.
இரு தசாப்தங்களுக்கு முன்வரைஇ இங்கு 'பச்சைப்பானை'யில் (சுடாத களிமண் பானை) பொங்கல் பொங்கிப் படைத்த அற்புதத்தைஇ இன்றும் பெரியவர்கள்இ சிலிர்ப்போடு விவரிக்கிறார்கள். பானை உடைந்துவிடும் என்ற அவநம்பிக்கையாலும்இ உடைந்தால் அது அபசகுனம் என்ற அச்சத்தாலும்இ இன்று இவ்வற்புதத்தை நிகழ்த்திக்காட்ட யாரும் முன்வருவதில்லை!
17ஆம் நூற்றாண்டில்இ மழைபொய்த்தபோதுஇ இவ்வாலயப் பூசகர் கண்ணப்பர்இ அம்மன் மீது 'மழைக்காவியம்' பாடிஇ மழை பொழியவைத்த அற்புதமும் நடந்திருக்கிறது. இன்றும்இ மழை பொய்த்துப்போகும் சந்தர்ப்பங்களில்இ அதைஇ பயபக்தியுடன் பாடும்போதுஇ மழை பெய்வது கண்கூடு.
வரலாற்றுப்பின்னணி :-
ஈழத்துப்பழங்குடிகளான நாகரும் வேடரும் குடியிருந்த பழம்பெரும் கிராமம்இ தம்பிலுவில். இங்கு ஆதியிலிருந்தே விளங்கிய தாய்த்தெய்வ வழிபாடேஇ தமிழகத்தொடர்புகளை அடுத்துஇ பிற்காலத்தில் கண்ணகி வழிபாடாக பரிணமித்தது எனக்கொள்ளமுடியும்.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில்இ இலங்கை மன்னன் கஜபாகுவால் தொடங்கிய கண்ணகி வழிபாடுஇ அவன்மூலமாகவே இங்கு வந்ததென்றும்இ வற்றாப்பளையிலிருந்து இங்கு பரந்ததென்றும்இ கண்டிமன்னர் காலத்தில் அங்கிருந்து இங்கு பரவியதென்றும்இ யாழ்ப்பாணத்திலிருந்து நாடார் குடியேற்றம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
இவ்வாறு பல்வேறு ஊகங்கள் காணப்பட்டாலும்இ கண்ணகி வழிபாடு தெற்கிலிருந்து வந்ததாகக் கூறுவதே மட்டக்களப்பு வழக்கு என்பது ஊன்றி நோக்கவேண்டிய விடயம். 'அம்மாள் தெற்கிலிருந்து வடக்கே பறந்து வந்தாள்' என்பதுபோல் விளங்கும் செவிவழிக்கதைகளும் இக்கருத்து சார்பாக எழுந்தவையே எனலாம்.
இதை வைத்து நோக்கும்போதுஇ (பண்டைய) மட்டக்களப்புத் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்த கண்ணகி ஆலயங்கள் என்றவகையில்இ பாணமைஇ தம்பிலுவில்இ பட்டிமேடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மூன்றனுள்ளும் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயமே பழமை வாய்ந்ததாகவும்இ வரலாற்றோடு அதிகதொடர்பு வாய்ந்ததாகவும் இனங்காணப்பட்டுள்ளது.
அவ்வகையில் மட்டக்களப்புத்தேசத்தின் கண்ணகி வழிபாட்டின் பிறப்பிடம் என்று தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தைக் கூறலாம்!
சரித்திரக்குறிப்புக்கள்இ கஜபாகு இலங்கையில் பத்தினிவழிபாட்டை அறிமுகஞ் செய்த சிலவருடங்களுக்குள்ளாகவே இங்கும் கண்ணகி வழிபாடு அறிமுகமானதையும்இ அதுஇ கஜபாகு அல்லது சிங்கள அரசின் மூலம் அன்றிஇ நேரடியாகப் பாரதத்திலிருந்தே வந்துசேர்ந்ததையும் கூறிச் செல்கின்றன.பட்டிமேட்டுக் கண்ணகி அம்மனுக்குரிய 'பொற்புறா வந்த காவியம்' கலி. 3300இற்கு (கி.பி.198) அண்மையான காலப்பகுதியில் தம்பிலுவில்லிலும் அடுத்து இறக்காமம்இ பட்டிமேடு என்பவற்றிலும் கண்ணகி ஆலயங்கள் உருவானதாகக் கூறுகிறது.
இதுஇ கி.பி 178இல் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவனின் கண்ணகி விழாவை அடுத்துஇ தமிழகத்தில் கண்ணகி வழிபாடு அறிமுகமாகித் தீவிரமாகப் பரவியது என்ற சிலப்பதிகாரக்குறிப்போடு (வஞ்சிக்காண்டம் - வரந்தருகாதை) ஓரளவு ஒத்துப் போகின்றது என்பது நோக்கற்பாலது. இவ்வாறு தமிழகமெங்கும் பரவிய வழிபாடுஇ ஈழத்தையும் நேரடியாகச் சென்றடைதல் என்பது சாத்தியமான ஒன்றேயாம். அதைக் கீழ்க்காட்டும் குறிப்பு உறுதிசெய்கிறது.
தமிழகத்தினின்று கொணரப்பட்ட காளியம்மன்இ செண்பகநாச்சியம்மன்இ கண்ணகியம்மன் ஆகிய மூன்று அம்மன் விக்கிரகங்கள்இ திருகோணமலைஇ இலங்கைத்துறைஇ கந்தபாணத்துறை ஆகிய மூன்று பண்டைத்துறைமுகங்களூடாக இலங்கையை அடைந்துஇ சம்பூர்இ ஈச்சிலம்பற்றைஇ தம்பிலுவில் ஆகிய மூன்று இடங்களில் தாபிக்கப்பட்டதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு உண்டு. இதுஇ தமிழகத்திலிருந்தே இப்பகுதிக்கு கண்ணகி வழிபாடு அறிமுகமானது என்ற கருத்தை உறுதி செய்கிறது.
செண்பகநாச்சியம்மனோடு இலங்கை வந்த காரணமேஇ தம்பிலுவில் கண்ணகிக்கும் செண்பகநாச்சியம்மன் அல்லது செண்பகவல்லியம்மன் எனும் சிறப்பான பெயர்கள் அமையக் காரணமாகிற்றுப் போலும்.
இவ்வாறு வந்து சேர்ந்த அம்மனுக்குஇ இன்று தம்பிலுவிலுக்கு மேற்கே பரந்து காணப்படும் 'ஊரக்கைவெளி'யில் ஆலயம் எழுந்ததாகவும்இ ஏதோகாரணத்தால் சிலகாலம் புகழ்மங்கிஇ அவ்வாலயம் சிதைந்துபோக சிறிதுகாலத்தின் பின்இ ஒரு புறாவின் மூலம்இ அம்மன் விக்கிரகத்தின் இருப்பிடம் ஊரவர்க்கு இனங்காட்டப்பட்டதாகவும்இ அதை அடுத்து மீண்டும் அன்னைக்கு கோவில் எழுப்பப்பட்டதாகவும் மரபுரைகள் வழங்குகின்றன.
இவ்வாறுஇ ஊரக்கைவெளியில் அமைந்திருந்த அம்மன் ஆலயம் பிற்காலத்தில் தம்பிலுவில்லுக்கு இடம்பெயர்ந்தாலும்இ மழைபொய்த்துப் போகும் சந்தர்ப்பங்களில்இ அம்மனைஇ மீளவும் ஊரக்கைவெளிக்கு எடுத்துச்சென்று இருத்திஇ மழைபொழியும் வரை பூசனை புரிவது வழக்கமாக இருந்துள்ளது. 'தம்பிலுவில் மழைக்காவியத்தின்' மூலம்இ இவ்வழக்கம்இ ஒல்லாந்தர் காலம் வரை இருந்துள்ளது என அறியமுடிகின்றது.
இப்பகுதியைப் பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட மட்டக்களப்பு மன்னர்இ சோழர்இ பொலநறுவை மன்னர்இ யாழ்ப்பாண மன்னர்இ கண்டி மன்னர்இ பாண்டியர் போன்றவர்களால்இ மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக்கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம் திருப்பணி கண்டதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தமுடிகின்ற அதேவேளைஇ திருக்கோவிலை அடுத்துஇ பிரசித்திபெற்று விளங்கிய இவ்வாலயமும் அவர்களின் திருப்பணிகளைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சோழர்தலைநகரம் தஞ்சையில் 'சிங்களநாச்சி' என்ற பெயரில் கண்ணகிக்குக் கோவில் எழுந்தமை (இக்கருத்தில் மாறுபாடுடையோரும் உண்டு)இ சோழரை வென்ற 1ஆம் விசயபாகுவால் இவ்வாலயத்துக்கு நேர்த்தியாக வழங்கப்பட்ட அம்மானைக்காய்கள்இ பொற்சிலம்பு என்பன இன்றும் ஆலயத்தில் உள்ளமைஇ திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயத்திலுள்ள 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'தம்பிலுவில் கல்வெட்டு' இங்கிருந்தே பெறப்பட்டமைஇ குளிக்கல்வெட்டுப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டப்பத்தான்குடியினரே இவ்வாலய நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றமைஇ தம்பிலுவில் கண்ணகியோடு தொடர்புடைய நாட்டார் இலக்கியங்கள் யாவும் கண்டி மன்னர்களைப் புகழ்ந்துரைக்கின்றமை என்று தொடரும் ஆதாரங்கள் மூலம் மேற்கூறிய கருத்தை உறுதிசெய்யமுடிகின்றது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற அம்மன் ஆலயத்தின் பெருவிழாவாக அமைவது 'வைகாசிப்பொங்கல்' ஆகும். அதன் சிறப்பையும் ஆலயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் அடுத்த பதிவில் பார்ப்போமா?
'அம்பிகை சடாட்சரி மனோகரி பராபரி ஆனந்தரூபி அகிலாண்ட நாயகி
தும்பிமுகனைப் பெற்ற காரணி நாரணி தூய பங்கயபாத பூரணிமாதங்கி
நம்புமடியார்கள் வினை நோயகல நாளும் நயமான மழைதந்து நெல்விளைவு தருவாய்
தம்பிலுவில் மாநகரில் வீற்றினிதிருக்கும் தாயே யிரக்கமுள்ள தருமதேவதையே!'
- அம்மன் ஊர்சுற்றுக்காவியம் 16.
---

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!