Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலய கட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர்

தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியா…

Image
தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு - கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்புக்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்கு கல்வி அமைச்சர் இன்று வருகை தந்திருந்த நிலையிலேயே மேற்படி கட்டிடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலய அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் து. நவரட்னராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ. செல்வராசா, திருக்கோவில் பிரதேசசபை தவிசாளல். வி. புவிதராஜன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ. போல், திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி தி. கணேசமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி. ஈ.பி. சமிந்த எதிரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



---

You may like these posts

Comments